இந்தியா

தனியார் மயமாக்கலை கண்டித்து அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Added : மே 23, 2020
Share
Advertisement

புதுச்சேரி: கோரிக்களை வலியுறுத்தி அஞ்சல் ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரனோ ஊரடங்கு உள்ள சூழ்நிலையில் இந்திய அஞ்சலக பேமெண்ட் வங்கிக்கு கணக்கு பிடிக்க இலக்கு நிர்ணயம் செய்வதை கண்டித்து, தேசிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம், அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம், தபால்கார் மற்றும் பன்முகத்திறன் நான்காம்பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.புதுச்சேரி தலைமை தபால் நிலையம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்தில் அஞ்சல் ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கோரிக்கை முழக்கம் எழுப்பினர். தொழிற்சங்க நிர்வாகிகள் சுகுமாரன், கருணாகரன், சுந்தரமூர்த்தி, சேகர், விஜயகுமார் கண்டன உரையாற்றினர். போராட்டத்தின்போது தொழிலாளர் நல சட்டங்களை திருத்தம் செய்யக்கூடாது. மக்கள் நலன் காக்கும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது. தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தக்கூடாது. மத்திய அரசு ஊழியர்கள், ஜி.டி.எஸ்., ஓய்வூதியர்களின் பஞ்சப்படி முடக்கத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X