இந்தியா

பொது சேவை மையங்கள் பயன்பாட்டிற்கு வருமா?

Added : மே 23, 2020
Share
Advertisement

திருக்கனுார்; திருக்கனுாரில் பொது சேவை மையங்கள் செயல்படாததால், ஆதார் உள்ளிட்ட சான்றிதழ்களில் திருத்தம் செய்ய முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.புதுச்சேரியில் பொதுமக்கள் நலன் கருதி பொது சேவை மையங்கள் துவங்கப்பட்டன. இங்கு, ஆதார் கார்டு திருத்தம், பிறப்பு, இறப்பு சான்றிதழ், வருவாய் துறை சான்றிதழ்களை பொதுமக்கள் நேரடியாக ஆன்லைன் மூலம் பெற்று வருகின்றனர்.இந்நிலையில் கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பொது சேவை மையங்கள் மூடப்பட்டுள்ளது. இதனால், மத்திய மாநில அரசுகளால் வழங்கப்பட்ட நிவாரண நிதி பெறுதல், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் முன்பணம் எடுத்தல் போன்ற வங்கி சேவைகளை பெற, ஆதார் கார்டுகளில் உள்ள குறைகளை சரி செய்ய முடியாமல் பொதுமக்கள், தொழிலாளர்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதற்கிடையே, தமிழகத்தில் கடந்த 18 ம் தேதி முதல் கலெக்டர் அனுமதியுடன், பொது சேவை மையங்கள் செயல்பட துவங்கிவிட்டன. ஆனால், புதுச்சேரியில் பொது சேவை மையங்கள் செயல்படவில்லை.அனைத்து பணிகளுக்கும் ஆதார் முக்கியம் என்ற நிலையில், அதில் உள்ள குறைகளை திருத்தம் செய்ய பொதுசேவை மையத்தின் மூலம் தான் முடியும். எனவே அரசு உடனடியாக பொது சேவை மையத்தினை திறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X