இந்தியா

வருமான வரித்துறையினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Added : மே 23, 2020
Share
Advertisement

புதுச்சேரி; புதுச்சேரி வருமான வரித்துறை ஊழியர்கள், மத்திய அரசை கண்டித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தனியார் மயமாக்கல், அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி தராதது போன்ற மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதுமான கண்டன ஆர்பாட்டத்திற்கு தொழிற் சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன.அதன்படி, வருமான வரித்துறை சங்க பொதுச் செயலர் வெங்கடேசன் சுற்றறிக்கையின்படி, புதுச்சேரியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் மற்றும் முதன்மை ஆணையர் அலுவலகம் முன்பாக, ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். செயலர் நிகமாந்ததேசிகன் முன்னிலை வகித்தார். கடலுார், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மண்டல செயலர் கோவிந்தன் கண்டன உரையாற்றினார்.பொருளார் சிற்றரசன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள், கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் சமூக இடைவெளி விட்டு முக கவசமும் அணிந்து பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X