இந்தியா

வீடு புகுந்து பெண்ணின் முகத்தை மூடி 5 சவரன் நகை பறிப்பு: மர்ம ஆசாமிக்கு வலை

Added : மே 23, 2020
Share
Advertisement

புதுச்சேரி: வீடு புகுந்து பெண்ணின் முகத்தை துணியால் மூடி, 5 சவரன் நகையை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி கோரிமேடு, காமராஜர் நகர், வாணிதாசன் வீதியைச் சேர்ந்தவர் மல்லிகா,45; கணவர் இல்லை. லாஸ்பேட்டையில் உள்ள காஞ்சிமாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில் தினக்கூலி பணியாளராக வேலை செய்து வருகிறார்.நேற்று முன்தினம் காலை 4:30 மணிக்கு, வீட்டு வாசலில் கோலம் போட்டு விட்டு வீட்டிற்குள் சென்றார். பின்னால் வந்த மர்ம நபர், தான் அணிந்த 'டி'சர்ட்டால் மல்லிகாவின் முகத்தை மூடி, அவர் அணிந்திருந்த 5 சவரன் நகையை பறித்து கொண்டு ஓடினார். கீழே விழுந்த மல்லிகா, கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.அதற்குள் மர்ம நபர், அருகில் உள்ள தமிழக பகுதிக்குள் ஓடி மறைந்தார். பொதுமக்கள் தமிழக பகுதிக்குள் விரட்டிச் சென்று விசாரித்தனர்.அப்போது, தமிழக பகுதியான திருநகரில் ஏற்கனவே மூன்று வீடுகளில் புகுந்து அங்கிருந்த பெண்களிடம், இரும்பு கம்பியை காண்பித்து நகை, பணம் கேட்டு மிரட்டியதும், அங்கு பணம் நகை இல்லாததால், புதுச்சேரி பகுதியில் புகுந்து கைவரிசை காட்டியது தெரிய வந்தது.இதுகுறித்து மல்லிகா கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபரை தேடிவருகின்றனர். இச்சம்பவம் குறித்து ஆரோவில் போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.போலீசார் எச்சரிக்கைகொரோனா ஊரடங்கால் பலர், வேலை வாய்ப்பு இழந்து வருமானம் இன்றி வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். வறுமை காரணமாக திருட்டு, வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபட அதிக வாய்ப்பு உள்ளது. ஆதலால், பெண்கள் நகை அணிந்து கொண்டு வெளியே செல்லும்போதும், பணம் கொண்டு செல்லும்போது பாதுகாப்பாக செல்ல போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X