மதுக்கடை உரிமம் ஏலம் விட வேண்டும்: கவர்னர் கிரண்பேடி வலியுறுத்தல் | Dinamalar

இந்தியா

மதுக்கடை உரிமம் ஏலம் விட வேண்டும்: கவர்னர் கிரண்பேடி வலியுறுத்தல்

Added : மே 23, 2020
Share

புதுச்சேரி: புதுச்சேரியில் மதுபான கடைக்கான உரிமத்தை ஏலம் விட, வலியுறுத்தி வருவதாக கவர்னர் கிரண்பேடி சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். புதுச்சேரி மாநில வளர்ச்சி தொடர்பாக எம்.எல்.ஏ.,க்கள் லட்சுமிநாராயணன், அன்பழகன் ஆகியோர் அனுப்பியுள்ள கடிதம் தொடர்பாகவும், மாநில வளர்ச்சி தொடர்பான விபரங்களை குறிப்பிட்டு, கவர்னர் கிரண்பேடி சமூக வலைத்தளத்தில் விடுத்துள்ள பதிவு:கவர்னர் அலுவலகம், கடந்த நான்கு ஆண்டுகளாக மதுக்கடைகளுக்கான உரிமங்களை ஏலம் விட, ஒரு பொதுவான கொள்கை உருவாக்க வலியுறுத்தி வருகிறது. இதன் மூலம் அரசின் கருவூலத்துக்கு வருவாயை கணிசமாக உயர்த்தலாம். கலால் துறையிலும் வெளிப்படையான மேலாண்மை உருவாகும்.தனியார் நிறுவனங்களின் சொத்துகளுக்கு வரி விதிப்பு, கேபிள் டி.வி. மீட்டெடுப்பு, நகராட்சி சேவைகளுக்கு பயனாளிகளிடம் கட்டணம் வசூலிப்பை முறைப்படுத்துவது, மின்சாரம், வணிகவரி மற்றும் சொத்து வரி உள்பட பல நிலுவைத்தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம்.குறிப்பாக பொதுத்துறை நிறுவனங்கள் செயல்பாடு தொடர்பான விஜயன் கமிட்டி அறிக்கையை செயல்படுத்த வலியுறுத்தினோம். அரசு சொத்துகளை மீட்கவும், வாடகை வருவாயை சீரமைக்கவும் கோரினோம். மோட்டார் வாகன சட்டத்தை நடைமுறைப்படுத்தவும், மீறுவோர் மீது உடனடி அபராத முறையை கொண்டு வந்து அதை சாலை பாதுகாப்பு நிதி கணக்கில் சேர்க்க வலியுறுத்தப்பட்டது. இந்த நிதி திரட்டும் நடவடிக்கைகள் அனைத்தும், அரசியல் விருப்பத்திற்காகவே காத்துக்கொண்டிருக்கிறது.குறிப்பாக காங்., எம்.எல்.ஏ., லட்சுமிநாராயணன் கடிதத்தின் அடிப்படையில், புதுச்சேரி அரசு இத்திட்டங்களை செயல்படுத்தினால் ரூ. 4,000 கோடி பெற முடியும். அவரது கடிதத்தை அரசு பார்க்க வேண்டும். அரசு இந்த ஆதாரங்களின் அடிப்படையை பார்ப்பது அவசியம். இந்திய அரசும் பல நிபந்தனைகளை கடுமையாக விதித்துள்ளது. இதுபோன்ற நிலையை புரிந்து கொள்ளவும், அதை செயல்படுத்தவும் மக்களுக்கு விழிப்புணர்வை அரசு ஏற்படுத்துவது அவசியம்.அத்துடன் வளங்களை திரட்டவும், அரசாங்க நிதியை புத்திசாலித்தனமாக பயன்படுத்தவும் ஒரு கூட்டு அரசியல் விருப்பம் தேவை. கவர்னர் அலுவலகம் முழு ஆதரவையும் இப்பணிகளுக்கு வழங்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X