இந்தியா

கொரோனா தொற்று அதிகரிப்பால் முள்ளோடையில் கண்காணிப்பு தீவிரம்

Added : மே 23, 2020
Share
Advertisement

பாகூர்; புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மாநில எல்லையான முள்ளோடையில் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.புதுச்சேரியில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.அருகாமையில் உள்ள தமிழக பகுதியான விழுப்புரம், கடலுார் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், புதுச்சேரியில் நோய் தடுப்பு நடவடிக்கை முடுக்கி விடப்பட்டு, எல்லை பகுதிகள் போலீசார் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.அதனையொட்டி, புதுச்சேரி எல்லை பகுதியான முள்ளோடையில் கொரோனா தடுப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.நேற்று காலை தெற்கு பகுதி எஸ்.பி., ஜிந்தா கோதண்டராமன் தலைமை யில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, கடலுாரில் இருந்து உரிய காரணமின்றி வந்த ஏராளமானோரை, போலீசார் திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. வாகனங்களில் வருவோர் அனைவரும் மருத்துவ சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். இதனால், பைக், கார், லாரி போன்ற வாகனங்கள் நீண்ட துாரம் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X