டூ - வீலர்கள் மோதல் 2 தொழிலாளர்கள் பலி | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டூ - வீலர்கள் மோதல் 2 தொழிலாளர்கள் பலி

Added : மே 23, 2020
Share

திருச்சி : மணப்பாறை அருகே, டூ - வீலர்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருச்சி, மணப்பாறை அருகே, என்.பூலாம்பட்டியைச் சேர்ந்த, கூலித் தொழிலாளர்கள் ஜெயராஜ், 52; மரியராஜ், 60. இருவரும், நேற்று மாலை தவளவீரம்பட்டிக்கு, டி.வி.எஸ்., எக்ஸ்.எல். டூ - வீலரில் சென்றனர்.தவளவீரன்பட்டி பெட்ரோல் பங்க் அருகே, எதிரே வந்த பஜாஜ் டிஸ்கவர் பைக், இவர்கள் வந்த வண்டி மீது நேருக்கு நேர் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஜெயராஜ், சம்பவ இடத்தில் இறந்தார்.

மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மரியராஜ், அங்கு இறந்தார். வையம்பட்டி போலீசார், பைக்கை ஓட்டி வந்த ஜேம்ஸ், 38, என்பவரை கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X