இந்தியா

தமிழக மதுபானம் புதுச்சேரியில் விற்பனை ஜோர்: குவார்ட்டர் ரூ .300க்கு விற்பனை

Added : மே 23, 2020
Share
Advertisement

புதுச்சேரி: புதுச்சேரியில் மதுபான கடைகள் திறக்கப்படாததால், தமிழக மதுபானம் விற்பனை ஜோராக நடக்கிறது. குவார்ட்டர் ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது.கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 23ம் தேதி முதல் புதுச்சேரியில் மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டது. தமிழகத்தில் மதுபான கடைகள் திறக்க தளர்வு அளிக்கப்பட்டு, டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது.மதுவிற்கு பெயர்போன புதுச்சேரியில் மதுபான கடைகள் திறக்கப்படாததால், புதுச்சேரி குடிப்பிரியர்கள், தமிழகத்திற்கு படையெடுக்க துவங்கினர். தமிழகத்தில் கடை திறக்கப்பட்ட இரு நாட்கள் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.புதுச்சேரி குடி பிரியர்களும் கடலுார், திண்டிவனம், விழுப்புரம் கோலியனுார் கூட்ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு சென்று மதுபானம் வாங்கி வந்தனர். திருக்கனுார், அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தில் தமிழக மதுபானம் கடத்தி வந்ததாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.தற்போது, புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகாரிக்க துவங்கியுள்ளதால் மாநில எல்லைகளில் போலீஸ் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்திற்கு சென்று மதுபானம் வாங்கி வருவது இயலாத காரியமாக மாறிவிட்டது.இதை பயன்படுத்தி அரசியல் மற்றும் அதிகாரி பின்புலம் உள்ளவர்கள் தமிழக மதுபானங்களை மொத்தமாக வாங்கி வந்து புதுச்சேரியில் விற்பனை செய்து வருகின்றனர். டாஸ்மாக் கடையில் ரூ 110, ரூ. 120க்கு விற்பனை செய்யப்படும் குவாட்டர் பாட்டில், புதுச்சேரியில் ரூ. 300க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X