இந்தியா

அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் ஆர்ப்பாட்டம்

Added : மே 23, 2020
Share
Advertisement

புதுச்சேரி: மத்திய அரசை கண்டித்து அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் சார்பில் ஆர்பாட்டம் நேற்று நடந்தது.கொரோனா பாதிப்பின் நெருக்கடி சூழ்நிலையால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க,மத்திய அரசு ரூ. 20 லட்சம் கோடி அளவிற்கு, மக்களுக்கும், ஊழியர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் திட்டங்களை அறிவித்துள்ளதை கண்டித்து மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் சார்பில் நாடு தழுவிய அளவில், கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.அதன்படி, புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன பொதுச் செயலர் ராதாகிருஷ்ணன் தலைமையில், இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்தில்,புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில், அகவிலைப்படி நிறுத்தி வைப்பு ஆணையை திரும்ப பெற வேண்டும். அரசுத் துறைகளை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும்.அரசு ஊழியர்களுக்குஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படிநிலுவை தொகை, வீட்டு வாடகை படி,நிலுவைத் தொகை, உள்ளிட்டவற்றை வழங்கிட வலியுறுத்தப்பட்டது.இதே போல், புதுச்சேரி மாநில அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பு சார்பில்மிஷன் வீதி மாதா கோவில் அருகே பொதுச் செயலர் லட்சுமணசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X