தி.மு.க., எம்.எல்.ஏ., மீது வழக்கு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., எம்.எல்.ஏ., மீது வழக்கு

Added : மே 23, 2020
Share

கோவை : கோவை, குனியமுத்துார், ஜெ.ஜெ.நகரிலுள்ள, 'ஆலயம் பவுண்டேஷன்' இயக்குனர் ரங்கராஜ், குனியமுத்துார் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு புகார் அளித்தார்.

அதில், 'என் நிறுவனம், பல ஆண்டுகளாக, பல்வேறு கட்டுமான பணிகளை செய்து வருகிறது. கடந்த, 14ம் தேதி, சிங்காநல்லுார் தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., கார்த்திக், வலைதளத்தில், எங்களது நிறுவனம் குறித்து, அவதுாறான செய்திகளை கூறியுள்ளார்.'உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி, அவரது சகோதரர் குறித்தும், தவறான செய்தியை பரப்பி, பொது அமைதியை கெடுக்கும் வகையில், பொய்யான தகவலை பரப்புகிறார். எம்.எல்.ஏ., மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளார்.எம்.எல்.ஏ., கார்த்திக் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X