இந்தியா

துப்புரவு பணியாளர்களுக்கு தி.மு.க., நலத்திட்ட உதவி வழங்கல்

Added : மே 23, 2020
Share
Advertisement

புதுச்சேரி; நெல்லித்தோப்பு தொகுதியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை தெற்கு மாநில தி.மு.க., அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., வழங்கினார்.கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்க துப்புரவு பணியாளர்கள் இரவு, பகல் பாராமல் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் நலனை கருத்தில் கொண்டு நெல்லித்தோப்பு தொகுதியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.தி.மு.க., தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணியை துவக்கி வைத்தார். நிர்வாகிகள் ஹேமா பாண்டுரங்கம் மற்றும் நெல்லித்தோப்பு பொதுக்குழு உறுப்பினர் வேலவன் சார்பாக 100க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு ரூ. 2000 மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் விழாவில் ஊரடங்கு காலத்தில் மாநிலத்தின் சுகாதாரம் கருதி துாய்மை பணியில் ஈடுபட்ட துப்புரவு தொழிலாளர்களின் சேவைக்காக பாராட்டு தெரிவிக்கப்பட்டது. துப்புரவு தொழிலாளர்கள், துாய்மை பணியை அங்கீகரித்து நலத்திட்ட உதவிகள் வழங்கியதற்காக நன்றி தெரிவித்து கொண்டனர்.நிகழ்ச்சியில் மாநில துணை அமைப்பாளர் குணாதிலீபன்,முன்னாள் கவுன்சிலர் சக்திவேல், சந்திரேஷ், அகிலன், சபரி, ஏழுமலை, காந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X