இந்தியா

பாஸ்கர் எம்.எல்.ஏ., வழக்கறிஞர் சம்பத் ஆதரவாளர்கள் மோதல்; போலீஸ் குவிப்பு

Added : மே 23, 2020
Share
Advertisement

புதுச்சேரி; முதலியார்பேட்டையில் பாஸ்கர் எம்.எல்.ஏ., வழக்கறிஞர் சம்பத் ஆதரவாளர்கள் மோதல் காரணமாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.புதுச்சேரி-கடலுார் சாலைமுதலியார்பேட்டையில், வழக்கறிஞர் சம்பத்,நடத்தும்அப்துல்கலாம் சேவை மைய அலுவலகம் உள்ளது. இதன் பக்கத்தில் உள்ள சுவரில் சம்பத் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.அந்த கட்டடத்தில் பெயிண்ட் அடிக்க உள்ளதாக, பாஸ்கர் எம்.எல்.ஏ.,வின் சகோதரர்கள் ராஜ் (எ) ராஜ்குமார், மனோகரன் கூறினர். இதனால் போஸ்டர் கிழிக்கப்பட்டுள்ளது. அப்போது அங்கு நிறுத்தியிருந்த பைக்குகளை அகற்றுவது தொடர்பாக, மனோகர், ராஜ்குமாருக்கும், சம்பத் ஆதரவாளர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இருதரப்பினரும் மாறி மாறி கற்களை வீசி தாக்கிக் கொண்டனர்.காயமடைந்த இரு தரப்பைச் சேர்ந்த இரண்டு பேர், அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றனர்.இதையறிந்த பாஸ்கர் எம்.எல்.ஏ., தனது ஆதரவாளர்களுடன் முதலியார்பேட்டை போலீஸ் நிலையம் சென்று வழக்கறிஞர் சம்பத் ஆதரவாளர்கள் மீது புகார் தெரிவித்தார். அப்போது அப்துல் கலாம் சேவை மைய அலுவலகத்திற்குள் புகுந்த கும்பல் கண்ணாடி கதவுகள், இருக்கைகள், மேசை உள்ளிட்டவற்றை சூறையாடினர். எஸ்.பி. ஜிந்தாகோதண்டராமன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். சம்பத் ஆதரவாளர்கள் கடலுார் சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர்.அவர்களிடம்,புகார் அளித்தால் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதாக எஸ்.பி.,கூறினார்.இதையடுத்து சம்பத் தரப்பினர், பாஸ்கர் எம்.எல்.ஏ., மற்றும் அவரது சகோதரர்கள் மனோகர், வழக்கறிஞர்கள் ராஜ், வேலுபிரபாகரன் உள்ளிட்டோர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய புகார் தெரிவித்தனர். பின்னர் சம்பத் ஆதரவாளர்கள் முதல்வர் நாராயணசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து முறையிட்டனர். போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என முதல்வர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, அவர்கள்கலைந்து சென்றனர். இரு தரப்பு புகார்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்வது தொடர்பாக ஆலோசித்து வருகின்றனர். இரு தரப்பு மோதல் காரணமாக முதலியார்பேட்டையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X