பணி உயர்வு ஆணை | Dinamalar

இந்தியா

பணி உயர்வு ஆணை

Added : மே 23, 2020
Share

காரைக்கால்: காரைக்காலில் வேளாண்துறை உதவி அலுவலர் பணி ஆணையை அமைச்சர் கமலக்கண்ணன் வழங்கினார்.காரைக்கால் மாவட்டத்தில் வேளாண்துறையில் பல்வேறு பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருந்தது. இதனால், பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது.அதனையொட்டி, முக்கிய பணியிடங்களை பூர்த்தி செய்திட அமைச்சர் கமலக்கணணன், முதல்வரை வலியுறுத்தினார்.அதனையேற்று காரைக்கால் வேளாண் துறையில் களப்பணியாளர்களாக பணியாற்றி வந்த நான்கு பேருக்கு, வேளாண் உதவி அலுவலராக பதவி உயர்வு அளிக்கப்பட்டது.இதற்கான பணி ஆணையை காமராஜர் வளாகத்தில் வேளாண் அமைச்சர் கமலக்கண்ணன் வழங்கினார். நிகழ்ச்சியில் கூடுதல் வேளாண் துணை இயக்குநர் செந்தில்குமார், வேளாண் அதிகாரி கணேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X