இந்தியா

அப்துல்கலாம் சேவை மைய அலுவலகம் சூறையாடல் முதலியார்பேட்டையில் பதட்டம்: போலீஸ் குவிப்பு

Added : மே 23, 2020
Share
Advertisement

புதுச்சேரி; முதலியார்பேட்டையில் வழக்கறிஞர் சம்பத் நடத்தும் அப்துல்காலம் சேவை மைய அலுவலத்தை, பாஸ்கர் எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள் அடித்து உடைத்து சூறையாடினர். இரு தரப்பைச் சேர்ந்தவர்கள் புகார் மீது போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.புதுச்சேரி முதலியார்பேட்டையில், வழக்கறிஞர் சம்பத், அப்துல்கலாம் சேவை மையம் நடத்தி வருகிறார். இவரது அலுவலகம் பக்கத்தில் உள்ள சுவற்றில் வழக்கறிஞர் சம்பத் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது.கட்டடத்தில் பெயிண்ட் அடிக்க உள்ளதாக, பாஸ்கர் எம்.எல்.ஏ.,வின் சகோதரர் ராஜ் (எ) ராஜ்குமார், மனோகரன் கூறினர். இதனால் சுவற்றில் ஒட்டப்பட்டு இருந்த சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டுள்ளது.அங்கு நிறுத்தியிருந்த பைக்குகளை அகற்றுவது தொடர்பாக, மனோகர், ராஜ்குமாருக்கும், சம்பத் ஆதரவாளர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இருதரப்பினரும் மாறி மாறி அடித்து கொண்டனர். இதில் காயமடைந்த இரு தரப்பைச் சேர்ந்த இரண்டு பேர், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றனர்.இதை அறிந்த பாஸ்கர் எம்.எல்.ஏ., தனது ஆதரவாளர்களுடன் முதலியார்பேட்டை போலீஸ் நிலையம் சென்று வழக்கறிஞர் சம்பத் ஆதரவாளர்கள் மீது புகார் தெரிவித்தார்.அதே நேரத்தில் எம்.எல்.ஏ.,வின் ஆதரவாளர்கள், போலீசார் கண் எதிரிலே, அப்துல்கலாம் சேவை மைய அலுவலத்திற்குள் புகுந்து கண்ணாடி கதவுகள், இருக்கைகள், மேசை உள்ளிட்டவற்றை அடித்து உடைத்து சூறையாடினர். மேலும், அங்கிருந்தவர்களை தாக்கினர். அதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிதறி ஓடினர்.சம்பவ இடத்தில் எஸ்.பி. ஜிந்தாகோதண்டராமன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். வழக்கிறிஞர் சம்பத் தலைமையில் திரண்ட நுாற்றுக்கும் மேற்பட்டோர், கடலுார் சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களிடம் எஸ்.பி., புகார் அளித்தால் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.பாஸ்கர் எம்.எல்.ஏ.,வுக்கு எதிராக கோஷமிட்டபடி முதலியார்பேட்டை போலீஸ் நிலையம் வழக்கறிஞர் சம்பத் தரப்பினர், பாஸ்கர் எம்.எல்.ஏ., மற்றும் அவரது சகோதரர்கள் மனோகர், வழக்கறிஞர்கள் ராஜ், வேலுபிரபாகரன் உள்ளிட்டோர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய புகார் தெரிவித்தனர். பின்னர் வழக்கறிஞர் சம்பத் தலைமையில் திரண்டவர்கள், முதல்வர் நாராயணசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து முறையிட்டனர். போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, சம்பத் ஆதரவாளர்கள் கலைந்து சென்றனர்.வழக்கறிஞர் சம்பத் கூறியதாவது; கடந்த இரண்டு நாட்களாக வேல்ராம்பட்டு ஏரியில், தண்ணீரை இறைத்து மீன்பிடித்து வருகின்றனர். இது தொடர்பாக 1031க்கு புகார் தெரிவித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த பிரச்னையில் எங்களை தாக்க வேண்டும் என்ற நோக்கில், அலுவலத்தை உடைத்து சூறையாடி, கொலை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர் என்றார்.இரு தரப்பு புகார்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்வது தொடர்பாக ஆலோசித்து வருகின்றனர்.முதலியார்பேட்டை முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X