மது பாட்டில் கடத்தல் இருவர் கைது | Dinamalar

இந்தியா

மது பாட்டில் கடத்தல் இருவர் கைது

Added : மே 23, 2020
Share

வில்லியனுார்; தமிழகத்தில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.தமிழக பகுதியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வருவதாக வில்லியனுார் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் பிள்ளையார்குப்பம் பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.அப்போது பி.ஒய்.05.டபுள்யூ 4812 பதிவெண் கொண்ட பைக்கில் 35 மதுபாட்டில்களை கடத்தி வந்த வில்லியனுார் அடுத்த அகரம் கிராமத்தை சேர்ந்த அய்யனார்,35; மணிகண்டன், 36; ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 35 மதுபாட்டில்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்து கலால் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X