இந்தியா

ஊரடங்கை தீவிரப்படுத்தும் போலீசார்

Added : மே 23, 2020
Share
Advertisement

புதுச்சேரி; புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கியதால், ஊரடங்கு உத்தரவை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்ததால், 3ம் கட்ட ஊரடங்கில் மாநில அரசு பல தளர்வுகளை அளித்தது. கோவில்கள், தியேட்டர்கள், மதுபான கடைகள் மட்டுமே திறக்கப்படவில்லை. மற்றபடி அனைத்தும் வழக்கம்போல் இயங்கி வருகிறது. காமராஜர் சாலை, நேரு வீதி, அண்ணா சாலை, காந்தி வீதி, மிஷன் வீதி உள்ளிட்ட சாலைகள் வாகனங்களால் நிரம்பி வழிந்து, வழக்கம்போல் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில், கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கியதால், கிராமப்புறங்களில் ஊரடங்கு நேரத்தை கடைபிடிக்க போலீசார் தீவிரப்படுத்தி வருகின்றனர். கிராமப்பகுதியில் இரவு 7:00 மணிக்கு பிறகு திறந்திருக்கும் கடைகளை போலீசார் எச்சரித்து மூடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X