தமிழக சிறைத்துறைக்கு எதிராக ஈரான் தூதரகம் வழக்கு

Updated : மே 23, 2020 | Added : மே 23, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement

புதுடில்லி: தமிழக சிறைத்துறைக்கு எதிராக, ஈரான் துாதரகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, விசாரணைக்கு ஏற்க, உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.



latest tamil news



மேற்காசிய நாடான ஈரான் துணை துாதரகம் சார்பில், தமிழக சிறைத்துறைக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விபரம்:ஈரானை சேர்ந்த மொசாவி மசூத் மற்றும் முகமது ஜாப்ரானி ஆகியோர், போதை பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு, சென்னை, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களிடம், சிறை கண்காணிப்பாளர் சட்டத்திற்கு எதிராக நடந்து கொள்வதால், அவர்களை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும். சிறை கண்காணிப்பாளரை, 'சஸ்பெண்ட்' செய்வதுடன், அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து, நீதி விசாரணை நடத்த வேண்டும்.கைதிகளுக்கு, 1 கோடி ரூபாய் இழப்பீடு மற்றும் உரிய பாதுகாப்பு வழங்க, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டு இருந்தது.


latest tamil news



இந்த மனு, தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே தலைமையில், நீதிபதிகள், ஏ.எஸ்.போபண்ணா, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் கொண்ட அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. மனுவை ஏற்க மறுத்த நீதிபதிகள், இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகும்படி, மனுதாரருக்கு உத்தரவிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumzi - trichy,இந்தியா
23-மே-202016:48:13 IST Report Abuse
kumzi போதைப்பொருள் கடத்துன மூர்க்கனுக்கு ஒரு கோடி சன்மானமா ஹாஹாஹா இவனுங்களுக்கு ஜெயில்ல ...
Rate this:
Cancel
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
23-மே-202014:38:55 IST Report Abuse
வாய்மையே வெல்லும் ஈரான் தூதரக செயல்களை இங்க இருக்கிற கருப்பு ஆடு ஆலோசகர்கள் தான் தப்பாக சொல்லி கொடுத்து/ வழி நடத்தி பிரச்சனை செய்ய பார்க்குது. முளையிலேயே விஷக்கிருமியை புடிச்சு லாடம் அடிக்கவேண்டியது நம் கடமை ..
Rate this:
Cancel
Krishna - bangalore,இந்தியா
23-மே-202013:00:22 IST Report Abuse
Krishna All Foreigners Must Have Right To File Directly in SC
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X