கொரோனா பரவலை கடந்த மார்ச் மாதமே கணித்த எல் சால்வென்டர் அதிபர்..!

Updated : மே 23, 2020 | Added : மே 23, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

உலக மீடியாக்களின் கவனம் அனைத்தும் தற்போது வட அமெரிக்கா அருகே உள்ள குட்டி நாடான எல் சால்வென்டர் நாட்டின் அதிபர் நியாப் புகேலே மீது குவிந்துள்ளது.



latest tamil news



இதற்கு காரணம் என்னவென்று கேட்கிறீர்களா? கொரோனாவால் உலக நாடுகள் அனைத்தும் அவதிப்பட்டு வரும் இந்த நிலையில் எல் சால்வெண்டரில் கொரோனா பரவும் முன்னரே அதன் எல்லைகளை நியாப் மூடிவிட்டார். இதனால் அங்கு கொரோனா தொற்று இல்லாமல் மக்கள் நிம்மதியாக வாழ்கின்றனர். கடந்த மார்ச் மாதமே விழித்துக்கொண்ட எல் சால்வெண்டர் அதிபர் உடனே சர்வதேச விமான நிலைய சேவைகளை ரத்து செய்ய உத்தரவிட்டார். இதற்கு அப்போது அந்நாட்டு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.


latest tamil news



தற்போது அவரது முடிவையும் தொலைநோக்குப் பார்வையையும் உலகமே வியந்து பார்த்துக்கொண்டு இருக்கிறது. 38 வயது இளம் அதிபரான புகாலே அந்நாட்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறிவிட்டார் எனவும் நாட்டின் பொருளாதாரம் மீது அக்கறை கொள்ளவில்லை எனவும் தற்போது எதிர்கட்சிகள் விமர்சனம் செய்துவருகின்றன. இதைப் பற்றி துளிகூட கவலை கொள்ளாத புகாலே விமர்சனங்களை பொருட்படுத்தாது தைரியமாக தன் மனதுக்குப் பட்டத்தை செய்துவருகிறார்.

1992ம் ஆண்டு சால்வெண்டர் போர் நடைபெற்றது. அன்று துவங்கி இரண்டு கட்சிகளே அந்நாட்டில் கோலோச்சி வந்தன. தற்பொது அதனை தகர்த்து பாலஸ்தீன நாட்டவரான புக்காலே ஆட்சிப் பொறுப்பேற்று இளம் வயதினர் வாக்குகளை கவர்ந்து வெற்றி பெற்றார். தன்னை எதிர்ப்பவர்களையும், எதிர்கட்சி ஊடகங்களையும் சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்தே சமாளித்தவர் புகாலே. 2 மில்லியன் டுவிட்டர் பாலோயர்கள் கொண்ட புகாலே அதன்மூலம் பிரபலமடைந்து தற்போது தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
25-மே-202003:48:13 IST Report Abuse
J.V. Iyer நல்ல தலைவர்களின் செயல்பாடுகள் நெருக்கடியான நேரத்தில் எடுக்கும் முடிவுகளால் வெளிப்படுகின்றன. யார் நல்ல தலைவன் என்று இப்போது தெரியும்.
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
23-மே-202018:43:49 IST Report Abuse
Endrum Indian அப்போ சீனாவிலிருந்து ஒரு ட்வீட் இவர்களுக்கு பார்சேல் என்று வந்து விட்டதா மார்ச் 2019 லியே ???
Rate this:
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
23-மே-202006:31:25 IST Report Abuse
Sanny இவர் என்ன சொல்லுகிறார், கானகம் இருக்க பனம்பழம் விழுந்தது என்று சொல்லுகிறாரா? அல்லது உண்மையை சொல்லுகிறாரா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X