பொது செய்தி

தமிழ்நாடு

கலெக்டர் அலுவலகத்திற்கு, 'பஸ்'

Added : மே 23, 2020
Share
Advertisement

சென்னை : நம் நாளிதழில் வெளியான செய்தியால், கலெக்டர் அலுவலகத்திற்கு, அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

பாரிமுனையில் உள்ள, சென்னை கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள், அலுவலகம் வந்து செல்ல, கடுமையான சிரமமடைந்தனர்.செயலகம் மற்றும் மாநகராட்சி அலுவலகங்களில் செயல்படுத்தப்பட்டது போல, கலெக்டர் அலுவலக ஊழியர்களுக்கும், பஸ் வசதி ஏற்பாடு செய்து தர வேண்டும் என, நமது நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து, தலைமை செயலகம் தவிர்த்து, சென்னை கலெக்டர் அலுவலகம் உட்பட, பல்வேறு அரசு அலுவலகங்களில் பணியாற்றுவோருக்கு, 39 பஸ்கள் இயக்க, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனால், கலெக்டர் அலுவலக ஊழியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். ஏற்கனவே, காஞ்சிபுரத்திலிருந்து, தலைமைச் செயலகத்திற்கு, பஸ் வசதி செய்யப்பட்டு உள்ளது.மேலும், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து, இரண்டு பஸ்கள், நேரடியாக கலெக்டர் அலுவலகத்திற்கு, நேற்று முன்தினம் முதல் இயக்கப்படுகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X