தொடரும் மின் வெட்டால் துாக்கம் போச்சு!

Added : மே 23, 2020
Share
Advertisement

வேளச்சேரி: தடை செய்யப்பட்ட பகுதியில், அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால், கொரோனா பாதித்தவர்கள், துாக்கம் இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.

வேளச்சேரி, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, நேரு நகர், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதியில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள, 10க்கும் மேற்பட்ட தெருக்களில், 43 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுஉள்ளனர்.கடந்த சில நாட்களாக, பகல், நள்ளிரவு, அதிகாலை போன்ற நேரங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால், வயதானோர், கர்ப்பிணியர், குழந்தைகள், துாக்கம் இல்லாமல் மிகவும் அவதிப்படுகின்றனர்.

கத்திரி வெயில், வெப்பம் உச்சத்தில் உள்ளதால், கொரோனா பாதித்தவர்கள் போதிய ஓய்வு கிடைக்காமல், மிகவும் மன உளைச்சல் அடைகின்றனர். சீரான மின் வினியோகம் வழங்க, வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X