சம்பவம் செய்தி

தமிழ்நாடு

4 பேருக்கு கொரோனா; வார்டு அலுவலகம் மூடல்

Added : மே 23, 2020
Share
Advertisement

திருவான்மியூர்: நான்கு மாநகராட்சி ஊழியர்களுக்கு, கொரோனா பாதித்ததால், திருவான்மியூரில் உள்ள, ஒருங்கிணைந்த வார்டு அலுவலகம் மூடப்பட்டது.

அடையாறு மண்டலம், 180, 181 மற்றும் 182வது வார்டு அலுவலகம், திருவான்மியூர், காமராஜர் நகரில் உள்ளது. இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு, பரிசோதனை செய்யப்பட்டது.இதில், இரண்டு அலுவலக உதவியாளர் மற்றும் இரண்டு மின்துறை ஊழியர்கள் என, நான்கு பேருக்கு கொரோனா பாதித்தது. இதையடுத்து, ஒருங்கிணைந்த வார்டு அலுவலகம், நேற்று மூடப்பட்டது.திருவான்மியூர், பாரதிதாசன் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில், அலுவலகம் தற்காலிகமாக செயல்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X