மாமியாரை கொலை செய்த மருமகள் சிறையில் மரணம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாமியாரை கொலை செய்த மருமகள் சிறையில் மரணம்

Added : மே 23, 2020
Share
ஆதம்பாக்கம்: குடும்ப தகராறு காரணமாக, மாமியாரை கொலை செய்த வழக்கில் சிறையில் இருந்த மருமகள், உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார்.ஆதம்பாக்கம், கணேஷ் நகர், நான்காவது தெருவைச் சேர்ந்தவர் சரவணன், 54. இவரது மனைவி சரஸ்வதி, 48; மன நோயால் பாதிக்கப்பட்டவர். சரவணன், தன் தாய் சுலோசனா, 77, மனைவி, மகனுடன் வசித்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் நடந்த தகராறில், மாமியாரை கத்தியால் குத்தி, சரஸ்வதி

ஆதம்பாக்கம்: குடும்ப தகராறு காரணமாக, மாமியாரை கொலை செய்த வழக்கில் சிறையில் இருந்த மருமகள், உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார்.

ஆதம்பாக்கம், கணேஷ் நகர், நான்காவது தெருவைச் சேர்ந்தவர் சரவணன், 54. இவரது மனைவி சரஸ்வதி, 48; மன நோயால் பாதிக்கப்பட்டவர். சரவணன், தன் தாய் சுலோசனா, 77, மனைவி, மகனுடன் வசித்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் நடந்த தகராறில், மாமியாரை கத்தியால் குத்தி, சரஸ்வதி கொலை செய்தார்.இவ்வழக்கு தொடர்பாக அவர், கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுபடி, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த சரஸ்வதி, கடந்த, 19ல், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கோரப்பட்ட, 'பெயில்' நேற்று முன்தினம் கிடைத்தது.இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த சரஸ்வதி, நேற்று அதிகாலை மரணமடைந்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X