பொது செய்தி

இந்தியா

2,317 சிறப்பு ரயில்களில் 31 லட்சம் தொழிலாளர்கள் பயணம்

Updated : மே 23, 2020 | Added : மே 23, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
migrants, migrant workers, Indian Railways, Railway, Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown, ரயில்வே

புதுடில்லி: மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று, மே, 1ம் தேதி முதல் இயக்கப்பட்ட, 2,317 சிறப்பு ரயில்களில், 31 லட்சத்திற்கும் மேற்பட்ட புலம் பெயர் தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊர்களை சென்றடைந்துள்ளனர்.

இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: கொரோனா ஊரடங்கால், லட்சக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்களின் வாழ்வாதாரம், பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களை, சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என, மாநில அரசுகள், ஏப்., மாத பிற்பகுதியில் கோரிக்கை விடுத்த நிலையில், சிறப்பு ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டது.

மஹாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், ம.பி., உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, ஏழு லட்சம் தொழிலாளர்களை, பல்வேறு மாநிலங்களுக்கு அழைத்து செல்ல வேண்டும் என, மேற்கு ரயில்வேக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரியில் இருந்து, 11.4 லட்சம் தொழிலாளர்களை, வட மாநிலங்களுக்கு அழைத்து செல்ல, தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை வந்தது.


latest tamil news


மத்திய ரயில்வேயிடம், 2.94 லட்சம்; வடக்கு ரயில்வேயிடம், 2.84 லட்சம்; தென் மத்திய ரயில்வேயிடம், 1.86 லட்சம் தொழிலாளர்களை அழைத்து செல்ல கோரிக்கை வந்தது. இதனால், பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மே, 1 முதல், 2,317 சிறப்பு ரயில்களில், 31 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களை, அவர்களின் சொந்த ஊர்களுக்கு அழைத்து சென்றுள்ளோம்.

தொடக்கத்தில், ரயில்வே மதிப்பீடு, 24 லட்சம் தொழிலாளர்களாக இருந்த நிலையில், ஏழு லட்சம் பேர் அதிகரித்துள்ளனர். மேலும் எவ்வளவு தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல காத்திருக்கின்றனர் என, எங்களிடம் தகவல் இல்லை. ஆனால், அவர்களுக்காக மாநில அரசுகள் கேட்கும் நிலையில், சிறப்பு ரயில்களை இயக்க தயாராக உள்ளோம். சிறப்பு ரயில்களில், சுமார், 12 லட்சம் பேர் உ.பி.,க்கும், ஏழு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பீஹாருக்கும் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
23-மே-202012:59:15 IST Report Abuse
Janarthanan இங்கு பொய் ஹிந்து மத்திய அரசை குறை சொல்ல பொய் கணக்கு போட்டு உள்ளான்??? அடேய் 2317 ட்ரெயின் ஒரு ட்ரெயின் சரியாக 1300 பேர் தான் வரும்??? மூளை மழுங்கி விட்டது டுமீல் குரூப்க்கு
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
24-மே-202002:42:48 IST Report Abuse
 ஜெய்ஹிந்த்புரம்1300 பேர் தான் சரியான கணக்கு, தப்பு என்னோடது. ஆனால் 2317 ரயிலு விட்டங்களான்னு நீ தான் உண்மையை சொல்லணும்....
Rate this:
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
23-மே-202010:29:21 IST Report Abuse
Loganathan Kuttuva தொழிலாளர்கள் தங்கள் மாநிலம் சென்று என்ன வேலை செய்வார்கள்? திரும்பு வருவதற்கு வழி உண்டா?
Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
23-மே-202013:02:14 IST Report Abuse
தமிழ்வேல் எல்லாரும் போயி சேர்றதுக்கு 31 தேதி ஆகிடும் . அப்புறமா அங்கேயிருந்து கிளம்பி வரவேண்டியதுதான் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X