14 நாட்கள் தனிமைபடுத்தி கொண்ட மலேஷிய பிரதமர்

Updated : மே 23, 2020 | Added : மே 23, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
மலேஷியா, மலேசியா, பிரதமர், யாசின் முகைதீன், கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்-19, தனிமை, malaysia, Prime minister, Pm, Muhyiddin Yassin, corona, coronavirus, covid-19, isolation, quarantine

கோலாலம்பூர்: மலேஷியாவில் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரி ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்த கூட்டத்தில் பங்கேற்ற மலேஷிய பிரதமர் முகைதீன் யாசின் 14 நாட்கள் தனிமைபடுத்தி கொண்டார்.

மலேஷியாவிலும் கொரோனா பரவி வருகிறது. இதுவரை, அந்நாட்டில், 7,137 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 115 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 20ம் தேதி அமைச்சரவை கூட்டத்திற்கு முந்தைய ஆலோசனை கூட்டம் ஒன்று நடந்தது. பிரதமர் முகைதீன் யாசின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பிரதமர் அலுவலகத்தில் இந்த கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனை தொடர்ந்து நேற்று(மே 22) முகைதீனுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதியானது.


latest tamil news


இதனையடுத்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக பிறப்பித்த சட்டத்தின்படி, பிரதமர், அவரது வீட்டிலேயே 14 நாட்கள் தனிமைபடுத்தி கொண்டுள்ளார். இது வெள்ளிக்கிழமை காலை முதல் துவங்குகிறது. மே 20 அன்று நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும், நேற்று முதல், வீடுகளிலேயே 14 நாட்கள் தனிமைபடுத்தி கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகத்தில் நடக்கும் அனைத்து கூட்டங்களும் சமூக இடைவெளியை பின்பற்றியே நடத்தப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பிம்பிடிக்கி பிளாப்பி - டோலக்பூர் ,இந்தியா
23-மே-202012:51:31 IST Report Abuse
பிம்பிடிக்கி பிளாப்பி பாமாயில் வரி உயர்வுக்கு பழி வாங்கும் விதமாய் கொரோனாவை இந்தியாவுக்குள் திட்டமிட்டே பரப்பியது இவிங்க தானே?
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
23-மே-202010:12:14 IST Report Abuse
Natarajan Ramanathan இவனை பார்த்தால் டவாலிமாதிரி இருக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X