திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கைதாகி ஜாமினில் விடுதலை

Updated : மே 23, 2020 | Added : மே 23, 2020 | கருத்துகள் (177)
Advertisement
சென்னை: பட்டியலின மக்களை அவமதித்ததாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னையில் இன்று (மே 22) கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் இடைக்கால ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். கடந்த பிப்., 15ம் தேதி திமுக இளைஞரணி சார்பில், அன்பகத்தில் நடந்த கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நீதிபதிகள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியது சர்ச்சையானது. அதேசமயம்,
dmk mp, dmk, tamil nadu news, tn news, tamil news, dinamalar news, R S Bharathi,
திமுக, ஆர்எஸ்_பாரதி, கைது, பட்டியலின, அவதூறு

சென்னை: பட்டியலின மக்களை அவமதித்ததாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னையில் இன்று (மே 22) கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் இடைக்கால ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த பிப்., 15ம் தேதி திமுக இளைஞரணி சார்பில், அன்பகத்தில் நடந்த கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நீதிபதிகள், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியது சர்ச்சையானது. அதேசமயம், ஆர்.எஸ்.பாரதியின் சர்ச்சை பேச்சு தொடர்பாக ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாண சுந்தரம் என்பவர் தேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். இதனால் அவர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திமுக அமைப்பு செயலாளருக்கு சிறை


latest tamil news


இந்நிலையில், மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் தலைமையிலான போலீசார், சென்னையில் ஆலந்தூரில் உள்ள வீட்டில் அதிகாலையில் ஆர்.எஸ்.பாரதியை கைது செய்தனர்.
கைது குறித்து அவர் கூறுகையில், ‛பிப்.,15ம் தேதி நான் பேசியது சமூக ஊடகங்களில் திரிக்கப்பட்டு வெளியானது. கோவையில் கொரோனா தடுப்பு பொருட்கள் வாங்கியதில் ரூ.200 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. உபகரணங்கள் வாங்கியதில் துணை முதல்வர் ஓபிஎஸ் செய்த ஊழலை புகாரளித்தேன். அதனால் யாரையோ திருப்திப்படுத்த என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீப்பை மறைத்து வைத்துவிட்டால் கல்யாணம் நிற்காது, கொரோனா விவகார ஊழல் பற்றி புகாரளிக்கப்படும்,' என்றார்.கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதியை, குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர்.அப்போது, இந்த விவகாரம் குறித்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதனால், அவரை சிறையில் அடைக்க முடியாது என திமுக தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இதனை ஏற்றுகொண்ட நீதிபதி அவரை இடைக்கால ஜாமினில் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தார்.


கண்டனம்

ஆர்.எஸ்.பாரதி கைதுக்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: முதல்வர் பழனிசாமியின் சலசலப்புக்கு தி.மு.க., அஞ்சாது. 3 மாதத்திற்கு முன் தரப்பட்ட புகாரை தூசி தட்டி கைது செய்தது கண்டிக்கத்தக்கது. நள்ளிரவு நாடகங்களை பார்த்து தி.மு.க., நடுங்காது. கொரோனா காலத்தில் அரசியல் நாடகங்களை அரங்கேற்றி வருவது கண்டனத்திற்குரியது.கொரோனா கால ஊழல், நிர்வாக தோல்வியை திசைதிருப்ப கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொய் வழக்குகள் மிரட்டல்களுக்கு தி.மு.க., அஞ்சாது. இவ்வாறு அதில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


தி.மு.க., எம்.பி., கனிமொழி, ம.தி.மு.க., பொது செயலர் வைகோ உள்ளிட்டோரும் ஆர்.எஸ்.பாரதி கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (177)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B.s. Pillai - MUMBAI,இந்தியா
27-மே-202007:42:11 IST Report Abuse
B.s. Pillai Congress government in Tamil Nadu ordered NOT to include the e name, while enrolling for school admission. In my name, there is no e added in the certificate. But the political parties are only responsible to bring up e feelings among the Public. The government had even removed the e portion in street names. DMK is very clever in doing this. It had divided the minds of public by hate politics towards Hindus and appeasing the muslims just for getting the votes. The same with Dalits. Dalit leader Jogendra nath Mandal, took thousands of Dalits with him and migrated to Pakistan with the hope that Dalits can improve only under the Muslims and not under Hindu majority India at the time of partition.There he was Law Minister. But alas, Within 3 years, he came back to India overnight flight leaving his family back in Pakistan to save his life. He resigned the post of Law Minister from Calcutta attaching 46 pages explaining the atrocities of Pakistanis against Dalit women by raping them and torturing and murdering the Dalits and throwing the bodies in the streets for dogs to eat.India gave shelter to him and he died in Calcutta in 1968. It is a pity that Thirumal valavan who says he is Dalit leader is joining hands with DMK, which uses him only for vote bank. Why Dr.Ambedkar did not go to Pakistan, ? He was very clear in his mind that the muslims can never support any other sect except them. Hindus are only hte broad mind to accept all , including the Muslim brothers. The Central & State Governments have many rules and regulations in favour of downtrodden e people .During last 70 years, there is definitely improvement in SC/ST/lower e people. The SC/ST and backward class people had over riding seniority in central and state governments and I know a few cases where juniors got promoted to higher posts of DGM and GMs who belonged to SC/ST/lower e. Even special recruitments were done only for Sc/ST eligible candidates by lowering the marks for eligibility. If we are broad minded, we should help and welcome and should not envy if the lower e people are given preference in government jobs and promotions. Because for centuries , they had suffered a lot under the high e suppressing tem. Even the private corporations and companies should give opportunities to them by reducing their standard of ion, if necessary.
Rate this:
Cancel
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
25-மே-202001:35:41 IST Report Abuse
Dr.C.S.Rangarajan நல்ல உள்ளம் படைத்தவர் என்றாலும், பிழை அவர் வாய்வழியே வரும் 'நேரம்' வந்ததெப்படி? காரோண நோயுடன் வாழும் வாழ்க்கை முறைதனை கற்க, கசடற என கற்றவர்கள் அறிவுறுத்துவதுபோல், ஊழல் தானே தன்னை மாய்த்துக் கொள்ளும் காலம் வரும் வரை, 'கட்டுண்டோம், காத்திருப்போமாக'. ஊழல் 'மார்கண்டேயனா' என்ன?
Rate this:
Cancel
Venki - BANGALORE,இந்தியா
24-மே-202013:53:17 IST Report Abuse
Venki ஆர்.எஸ்.பாரதிக்கு சப்பை கட்டும் வைகோ, மற்றும் இதர தலைவர்கள், அவர் சொன்ன கருத்துக்கும் சப்பை கட்டுவதாக எடுத்து கொள்ளலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X