பொது செய்தி

இந்தியா

அடுத்த 20 ஆண்டுகளில் பல சுகாதார சவால்கள்: ஹர்ஷ்வர்தன்

Updated : மே 23, 2020 | Added : மே 23, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Harsh Vardhan, Health Challenges, Health Minister, chairman, WHO's Executive Board, India, COVID-19 Cases, ஹர்ஷ்வர்தன், சுகாதார சவால்கள், 20ஆண்டுகள், கொரோனா, கோவிட்-19

புதுடில்லி: அடுத்த 20 ஆண்டுகளில் பல சுகாதார சவால்கள் இருக்கும் என உலக சுகாதார அமைப்பின் செயற்குழு தலைவராக பொறுப்பேற்ற ஹர்ஷ்வர்தன் கூறியுள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் செயற்குழு தலைவராக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் நேற்று (மே 22) பொறுப்பேற்றார்.


latest tamil news




பின்னர் அவர் பேசியதாவது: 135 கோடி மக்கள் வாழும் நாட்டில், 1.1 லட்சம் கொரோனா பாதிப்புகள் மட்டுமே உள்ளன. அதேபோல் இறப்பு விகிதமும் 3 சதவீதம் என்ற ரீதியில் தான் உள்ளது. கொரோனாவை இந்தியா, ஒரு செயல்திறன்மிக்க, முன்கூட்டிய வழியில், ஒப்பிட முடியாத அளவு உறுதியுடன் எதிர்கொண்டது. தற்போது இந்தியாவில் குணமடைந்தவர்கள் விகிதம் 40 சதவீதத்திற்கும் மேல் உள்ளது மற்றும் பாதிப்புகளின் இரட்டிப்பு விகிதம் 13 நாட்களாக உள்ளன. இந்த தொற்று நோயால் உலகளாவிய நெருக்கடியின் போது நான் இந்த பொறுப்பேற்கிறேன் என்பதை அறிவேன். அதே நேரத்தில், அடுத்த 20 ஆண்டுகளில் பல சுகாதார சவால்கள் இருக்கும் என்பதையும் நாம் அனைவரும் புரிந்து கொள்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VASEEGARAN - BANGALORE,இந்தியா
23-மே-202016:02:58 IST Report Abuse
VASEEGARAN முதல்ல சீனா காரனுக்கு காலத்திற்கும் மறக்காத வண்ணம் புத்தி புகட்டு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X