பொது செய்தி

தமிழ்நாடு

மாநில அதிகாரத்தை பறிக்கிறதா மத்திய அரசு: விளக்குகிறார் பொருளாதார நிபுணர்

Updated : மே 23, 2020 | Added : மே 23, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
coronavirus lockdown, indian economy, Economist Shriram Seshadri,
மாநிலஅரசு, மத்தியஅரசு, அதிகாரம், புலம்பெயர்தொழிலாளர், ஒரேநாடுஒரே கார்டு, ரேசன், கடன்,

மதுரை : மாநிலங்களுக்கு நிதியுதவி மற்றும் கடன் பெற விதித்துள்ள நிபந்தனைகள் மூலம் அவர்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிக்கிறது என்ற குற்றச்சாட்டு குறித்து பொருளாதார நிபுணர் ஸ்ரீராம் சேஷாத்திரி விளக்கியுள்ளார்.

கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள நிதி பிரச்னைகளை தீர்க்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. அதில் மாநில அரசுகள் கூடுதல் கடன் பெற்றுக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது.ஆனால் அதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த நிபந்தனைகளுக்கு பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மாநிலங்களை மத்திய அரசு பிச்சைக்காரர்கள் போல நடத்துகிறது' என தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் கூறினார்.

இந்த பிரச்னை குறித்து ஸ்ரீராம் சேஷாத்திரி கூறியதாவது: ஒவ்வொரு மாநிலமும் பத்திரப்பதிவு, மது விற்பனை, பெட்ரோல் வரி என அனைத்தும் இணைந்த 'நிகர மாநில வரிவருவாயின்' அடிப்படையில் 3 சதவீதம் கடன் பெற முடியும்.நிதியமைச்சர் அறிவித்த பொருளாதார மீட்பு திட்டத்தில் இதை 5 சதவீதமாக அதிகரித்துள்ளார். அதில் 3.5 சதவீதம் வரை கடன் பெற எந்த நிபந்தனைகளும் கிடையாது. மீதியுள்ள 1.5 சதவீதத்திற்கு தான் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதை ஏற்பதும், மறுப்பதும் மாநிலங்களின் விருப்பம்.வேண்டாமென்றால் பழைய 3 சதவீத கடன்களை பெற்றுக்கொள்ளலாம்.


காரணம் என்ன

மாநிலங்கள் நிதியை வேறு விஷயங்களுக்கு செலவிடக்கூடாது என்பதற்காகத்தான் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழகம், மேற்குவங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் அடுத்த ஆண்டு தேர்தல் வர உள்ளது. எனவே தேர்தலை எதிர்கொள்ள இலவசங்களை மாநில அரசுகள் அறிவிக்கலாம். அதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படலாம் என்பதால் தான் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. நிபந்தனைகளின்றி பெறும் கடன் 3.5 சதவீதம் போக 3.5-4.5 வரை உள்ள தொகை சீர்திருத்தங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.அதற்குத்தான் நிபந்தனைகள். அதில் சில இலக்குகளையும் மத்திய நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அந்த இலக்குகளை பூர்த்தி செய்து நிதி செலவிடப்படும் பட்சத்தில் கடைசி அரை சதவீதத்தை பெறலாம்


.ஒரே நாடு.. ஒரே கார்டு...

மாநிலங்களின் மின்துறை பெரும் நெருக்கடியில் உள்ளது. அது சீர்த்திருத்தப்பட்டேயாக வேண்டும். அதற்கான சட்டங்களை மத்திய அரசு தயாரித்து வருகிறது.தற்போது புலம்பெயர் தொழிலாளர் பிரச்னைக்கு முக்கிய காரணம் ஒரேநாடு...ஒரே ரேஷன்கார்டு திட்டத்தை அமல்படுத்தாததே.அந்த சட்டம் அமலாகியிருந்தால் அவர்கள் வாழும் இடங்களிலேயே பொருள் கிடைத்திருக்கும். உணவு பிரச்னை ஏற்பட்டிருக்காது.


latest tamil news
கூட்டாட்சி தத்துவம்

மத்திய அரசின் இந்த நிபந்தனைகள் கூட்டாட்சி தத்துவதற்கு எதிரானது என சிலர் கூறுகின்றனர். அது முழுக்க முழுக்க அரசியல் வார்த்தைதான். கூட்டாட்சி தத்துவத்தின் கீழ் இது வரவே இல்லை. மாநில அரசின் அதிகாரங்களை பறித்துக்கொண்டது என்பதும் தவறான வாதம். அரசியலமைப்பு சட்டப்படி மாநிலங்களுக்கு, மத்திக்கு என அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. எந்த நிலையிலும் மாநில அதிகாரத்தை மத்திய அரசு கையில் எடுக்க முடியாது.மாநிலத்தின் பிரச்னைகளில் சட்டம் ஒழுங்கு, விவசாயம் உள்ளிட்ட பல விஷயங்கள் உள்ளன. புலம்பெயர் தொழிலாளர் பிரச்னையில் மத்திய அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்க முடியாததற்கும் அதுவே காரணம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
23-மே-202020:00:48 IST Report Abuse
sankaseshan இந்த உண்மைகளை மறைத்து திருத்தி மாநில கட்சிகள் மக்களை ஏமாற்றுகிறார்கள் டிராவிஷ கட்சிகள் இருக்கும் வரை தமிழ்நாடு உருப்படாது கொள்ளை அடிப்பதில் இரண்டும் kuttukalavaanikal
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
23-மே-202018:39:45 IST Report Abuse
Endrum Indian எனக்கு ஒரு வாட்ஸப் இன்று வந்தது . அந்த இமேஜில் மூன்று லைன் இருந்தது ஒன்று Critic அதில் கூட்டம் அலைமோதுகின்றது. இன்னொன்று - Talker - அதில் கூட்டம் கொஞ்சம் கம்மி . Doer - ஒருத்தன் இல்லை அதில். அதைப் போலத்தான் இந்த கூமுட்டை மாநில அரசுகள். உளறல் எனது அடிப்படை உரிமை என்பது போல இருக்கின்றது. 3.5% வரை கேள்வியில்லை அதற்கு மேல் உத்தரவாதம் தரவேண்டும்???இதற்கு மாநில அரசுகள் ஒரே குய்யோ முறையோ உளறல்???இதில் என்ன கூட்டாட்சி???ஓ கூமுட்டை ஆட்சி கூடாது என்றால் நிச்சயம் உளறல் இருக்குமே விண்ணை தொட்டு.
Rate this:
Cancel
Gnanam - Nagercoil,இந்தியா
23-மே-202017:10:24 IST Report Abuse
Gnanam உண்மைதான் - ஒரே தேசம், ஓரே குடும்ப அட்டை திட்டத்தை அமல் படுத்தியிருந்தால் புலம்பெயர் தொழிலாளர்கள் இவ்வளவு அவதிப்பட்டிருக்க வேண்டியிராது. மக்களின் மனதை திசைதிருப்ப சில அரசியல்வாதிகளும், பத்திரிகைகளும் மாநில அதிகாரம் பறிபோவதாக கூறிவருகின்றனர். சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லும்போது மக்களும் குழம்புகிறார்கள். வல்லுனர்களின் அறிவுரைகள் தேவை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X