பொது செய்தி

தமிழ்நாடு

நகர் பகுதிகளிலும் சலூன் கடைகள் திறக்க அனுமதி

Updated : மே 23, 2020 | Added : மே 23, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
தமிழகம், சலூன், அழகுநிலையங்கள், திறக்க, அனுமதி, முதல்வர், இபிஎஸ், உத்தரவு, Beauty parlours, salons, reopen, Tamil Nadu, tn govt, chennai

சென்னை: தமிழகத்தில் ஊரக பகுதிகளில் மட்டுமே முடி திருத்தம் (சலூன்) மற்றும் அழகு நிலையத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், நாளை (மே 24) முதல் சென்னை தவிர, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளிலும் இயங்க அனுமதியளித்து முதல்வர் இபிஎஸ் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக அரசு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தொற்று பரவலை தடுக்க முன்னெச்சரிக்கைக்கென சில பாதுகாப்பு வழிமுறைகளுடன் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஏற்கனவே ஊரக பகுதியில் முடி திருத்தும் நிலையங்கள் மே 19 முதல் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.


latest tamil news


தற்போது முடி திருத்தம் மற்றும் அழகு நிலைய தொழிலாளர்களின் கோரிக்கையை பரிசீலித்து, சென்னை தவிர, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் முடி திருத்தம் மற்றும் அழகு நிலையங்களை நாளை (மே 24) முதல் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்குவதற்கு அனுமதியளிக்கப்படுகிறது. அதே நேரத்தில் தடை செய்யப்பட்ட பகுதிகளில் இயங்க அனுமதி கிடையாது. அந்த பகுதிகளில் இருந்து வரும் தொழிலாளர்களை பணியமர்த்தக் கூடாது.


latest tamil news


முடிதிருத்தம் மற்றும் அழகு நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியினை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும், அவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்களை நிலையங்களுக்குள் அனுமதிக்கக்கூடாது. வாடிக்கையாளர்களுக்கு கிருமிநாசினி வழங்குவதையும், முக கவசங்கள் அணிவதை கடை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். இந்நிலையத்தை ஒரு நாளைக்கு 5 முறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவ வேண்டும். ஏ.சி., வசதி இருப்பின் அதை கண்டிப்பாக உபயோகப்படுத்தக்கூடாது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatan - Puducherry,இந்தியா
23-மே-202019:31:40 IST Report Abuse
venkatan முடி திருத்துவோர்,மனித இடைவெளி விட்டு பொதுநலன் கருதி,சுகாதாரத்தை செலவு என்று பார்த்து சமரசம் செய்துகொள்ளக்கூடாது.1:1,அதிக பட்சம்2:2 என்ற விகிதத்தில் கூட்டம் சேரதவாறு,அப்போய்ண்ட்மெண்ட் கொடுத்து,டோக்கன் முறையில்,செல் நம்பருடன்,தமது உபகரணங்களை ஒவ்வொரு உபயோகிப்பிற்கு பின்னரும் முழுமையாக தொற்றகற்றி,சுய சுத்தம் பேணி,முக மூடியூடன் பணி ஆற்றிட வேண்டும்.அதுபோல் வாடிக்கையாளரும், முதலில் குளித்துவிட்டு,சிகை திருத்திய பின் மீண்டும் ஒருமுறை தொற்றகற்றி சோப்பு உபயோகித்து குளிக்க வேண்டும்.வாடிக்கையாளர் முழு முகவரி,கைபேசி எண், பட்டியல் பராமரிக்கவேண்டும்.சலூன் கடைக்காரரின் முகவரி,கைபேசி எண் முதலியன,நகர சுகாதார ஆய்வாளர் ஆய்வு செய்ய வேண்டும்.வாடிக்கையாளரின் காய்ச்சல் சளித்தொற்று பற்றி விசாரிக்க வேண்டும்.ஆரோக்கிய சேது செயலியை அனைவரும் தரவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.வாடிக்கயாளரின் எண்ணிக்கை வரம்பு பராமரிக்க வேண்டும்.
Rate this:
Cancel
Naagarazan Ramaswamy - Chennai,இந்தியா
23-மே-202017:33:40 IST Report Abuse
Naagarazan Ramaswamy சமூக இடைவெளி பேணுவதில் சிரமம் இருக்கிறது. கவனமாக செயல் படவேண்டும். தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும். அதே சமயம் முடி வெட்டிக்கொள்பவர்களின் நலமும் முறையாக பேணப்படவேண்டும். சலூன் காரர்கள் விதிமுறைகளை கண்டிப்பாக அனுசரித்து வருதல் அவசியம்.
Rate this:
Cancel
Perumal - Chennai,இந்தியா
23-மே-202013:27:01 IST Report Abuse
Perumal Hello aappu ,What is your requirement.Why don't you come and solve everything Don't criticize each and everything.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X