ஈரோடு: ஈரோட்டில் இருந்து, மூன்றாவது நாளாக இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில், ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள், 1,464 பேர், அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில், 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள், தங்கள் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்ல விண்ணப்பித்தனர். இவர்களுக்காக கடந்த, 20ல் ஈரோட்டில் இருந்து ஷ்ரமிக் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. அதில் உ.பி., மாநிலத்தை சேர்ந்த, 1,464 தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். நேற்று முன்தினம் புறப்பட்ட இரண்டாவது ரயிலில், ஒடிசா மாநிலத்துக்கு, 1,464 தொழிலாளர் சென்றனர். இந்நிலையில் நேற்றிரவு ஷ்ரமிக் சிறப்பு ரயில் மூலம், ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள், 1,464 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னதாக பல்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்ட அனைவருக்கும், மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு வழங்கப்பட்டது. அனைவருக்கும் காய்ச்சல், சளி பரிசோதனை செய்தனர். கலெக்டர் கதிரவன் தலைமையிலான அதிகாரிகள், சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE