காய்கறி மார்க்கெட் இடமாற்றம்: வ.உ.சி., பூங்காவில் பணி தீவிரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காய்கறி மார்க்கெட் இடமாற்றம்: வ.உ.சி., பூங்காவில் பணி தீவிரம்

Added : மே 23, 2020
Share

ஈரோடு: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட், பஸ் ஸ்டாண்டுக்கு மாற்றப்பட்டது. பஸ் போக்குவரத்து தொடங்கப்படலாம் என்பதால், மார்க்கெட்டை வ.உ.சி, பூங்காவுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்த பொருட்காட்சி திடல்கள் அகற்றப்பட்டு, கடைகள் அமைக்கும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது. வரும், 26 முதல் மார்க்கெட் செயல்படலாம் எனத் தெரிகிறது. இதுகுறித்து மாநகராட்சி அலுவலர்கள் கூறியதாவது: தற்போது செட்டுகள் அமைத்து, கடைகளுக்கான எல்லையை குறிக்கும் கோடுகள் அமைக்கும் பணி நடக்கிறது. பூங்காவுக்கு காய்கறி மார்க்கெட் மாற்றப்படுவது உறுதியான ஒன்றுதான். ஆனால், 26 முதல் இங்கு செயல்படத் தொடங்குமா? என்பதை உறுதியாக கூற முடியாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X