பொது செய்தி

தமிழ்நாடு

'மரவள்ளியில் கலப்படம்; பறிபோகும் எதிர்காலம்'

Added : மே 23, 2020
Share
Advertisement

ஈரோடு: ''கலப்படத்தை தடுத்தால் மட்டுமே, மரவள்ளி கிழங்கு சாகுபடிக்கு எதிர்காலம் இருக்கும்,'' என, தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மரவள்ளி உள்ளிட்டவைகளை சர்வதேச அளவில் சந்தைப்படுத்தும் நோக்கில் திட்டம் வகுத்து, 10 கோடி ரூபாய் ஒதுக்கப்படும், என அறிவித்துள்ளார். இதை வரவேற்கிறோம். தமிழகத்தில் அதிகம் விளையும் மரவள்ளி கிழங்கை நாமக்கல், சேலம், தர்மபுரி, ஈரோடு மாவட்டங்களில் உள்ள ஜவ்வரிசி, ஸ்டார்ச் ஆலைகள் கொள்முதல் செய்கிறது. ஆனால், ஜவ்வரிசியில் கலப்படம் செய்வதால், வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியவில்லை. தாய்லாந்தில் இருந்து இறக்குமதி அதிகரிக்கிறது. மரவள்ளியில் கலப்படத்தை தடுக்க, அரசு முயன்றால் மட்டுமே, மரவள்ளி விவசாயிகள் லாபம் பெறுவதுடன், மரவள்ளிக்கும் எதிர்காலம் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X