பொது செய்தி

தமிழ்நாடு

பழங்குடியின மக்களின் பிரச்னையை தீர்க்க போராடுவேன்; திருப்பூர் எம்.பி., ஆவேசம்

Added : மே 23, 2020
Share
Advertisement

கோபி: ''விளாங்கோம்பை பழங்குடியின மக்களின் பிரச்னையை தீர்க்க, மக்களை ஒன்று திரட்டி போராடுவேன்,'' என, திருப்பூர் எம்.பி., சுப்பராயன் தெரிவித்தார்.
கோபி அருகே கொங்கர்பாளையம் பஞ்., விளாங்கோம்பையில், பழங்குடியின மக்கள், 43 குடும்பமாக வசிக்கின்றனர். இங்கு நேற்று சென்ற, திருப்பூர் எம்.பி., சுப்பராயன், மக்களின் குறைகளை கேட்டறிந்தார். இதுகுறித்து எம்.பி., கூறியதாவது: திருப்பூர் லோக்சபா தொகுதியில், கோபி சட்டசபை தொகுதியின், கடைசி பகுதியாக விளாங்கோம்பை உள்ளது. இங்கு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி இல்லை. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தொகுதிக்குள், இப்படியொரு நிலை உள்ளது. இங்கு வருவதற்கு, சாலை வசதி இல்லை. விளாங்கோம்பை முதல் வினோபாநகர் பகுதி வரை, சாலை அமைக்க வேண்டும். இதுகுறித்து மக்கள் என்னிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இப்பகுதியில் சாலை அமைக்கும் உத்தேசம் உள்ளதா? என்பது குறித்து, சத்தியமங்கலம் வன அலுவலரிடம் கேள்வி கேட்கவுள்ளேன். இப்பகுதி மக்களின் பிரச்னையை, மத்திய அரசின் கவனத்துக்கு, கொண்டு செல்வேன். இதற்கு தீர்வு காணாவிட்டால், கோபி பகுதியில் மக்களை ஒன்று திரட்டி, போராடுவதில் நான் தலைமையேற்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X