பொது செய்தி

தமிழ்நாடு

ஈரோடு கோவில்களில் அறநிலைய இணை கமிஷனர் ஆய்வு

Added : மே 23, 2020
Share
Advertisement

ஈரோடு: அறநிலையத்துறை இணை கமிஷனர், ஈரோடு கோவில்களில் ஆய்வு செய்தார். தமிழக கோவில்களில், கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை, திருப்பணிகள் நடக்கும் கோவில்களில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய, மண்டல இணை கமிஷனர்களுக்கு, அறநிலையத்துறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, கோவை மண்டல இணை கமிஷனர் செந்தில் வேலவன், ஈரோடு பெரியமாரியம்மன் கோவில், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில், கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவில், கோட்டை கஸ்தூரி அரங்க நாதர் கோவில், கொங்காலம்மன் கோவில்களில் நேற்று ஆய்வு செய்தார்.
ஆய்வு குறித்து அவர் கூறியதாவது: கொங்காலம்மன் கோவிலுக்கு சொந்தமான, 54 கடைகளில், 36 பேர் வாடகை சரிவர செலுத்தாமல் உள்ளனர். பாக்கி செலுத்தாவிட்டால் கடைகளை அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில் மற்றும் ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் நடக்கும் திருப்பணியை, பழமை மாறாமல் விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சேதமடைந்த கஸ்தூரி அரங்கநாதர் கோவில் கொடிமரத்தை மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கோவில்கள் திறப்பு? கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட கோவில்கள், நான்காம் கட்ட ஊரடங்கு முடிந்த பின், திறக்கப்படலாம் எனத் தெரிகிறது. இதன் காரணமாகவே, கோவில்களின் நிலை குறித்து, அறிந்து கொள்ள, மண்டல அளவில் ஆய்வு நடப்பதாக, தகவல் எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X