ஈரோடு: கொரோனா நிவாரண நிதி மற்றும் நிவாரண உதவி கேட்டு, ஈரோடு மாவட்ட ஓவியர்கள் கூட்டமைப்பு சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மனு வழங்கினர். இதுகுறித்து கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது: மாவட்ட அளவில், 500க்கும் மேற்பட்ட ஓவியர்கள் உள்ளோம். சுவர், துணிகள், சாலைகளில் விளம்பரம் வரைந்து வருகிறோம். வழக்கமான நாட்களில் அரசு மற்றும் தனியார் விளம்பரங்கள் வரையும் வாய்ப்பு, ஓரளவு வருவாய் கிடைக்கும். கடந்த, 60 நாட்களாக எவ்வித பணியும் நடக்கவில்லை. குறிப்பாக, அரசு பணிகள் கூட நிறுத்தப்பட்டால், வருவாய்க்கு வழி இல்லை. மிகுந்த சிரமத்தில் உள்ளதுடன், நாங்கள் நலவாரியங்களில் கூட இணையவில்லை. எனவே, அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்தில் வழங்கப்படுவதுபோல, எங்களுக்கும் தலா, 2,000 ரூபாய் நிதி, நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும். நலவாரியங்களில், எங்களையும் இணைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE