சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருமணத்துக்கு ஜவுளி எடுக்க சென்ற பனியன் தொழிலாளி வீட்டில் திருட்டு

Added : மே 23, 2020
Share
Advertisement

கோபி: திருமணத்துக்கு ஜவுளி எடுக்க சென்ற, பனியன் கம்பெனி தொழிலாளி வீட்டில், ஏழு பவுன் நகை திருட்டு போனது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நம்பியூர் அருகே தைலாம்பாளையத்தை சேர்ந்தவர் சதீஸ்குமார், 26; திருப்பூர் பனியன் கம்பெனி தொழிலாளி. இவருக்கு ஜூன், 1ல், திருமணம் நடக்கவுள்ளது. ஜவுளி எடுக்க, சதீஸ்குமார் குடும்பத்துடன் நேற்று முன்தினம் அவிநாசி சென்றார். மாலையில் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த ஏழு பவுன் நகை திருட்டு போனது தெரிய வந்தது. சதீஸ்குமார் புகாரின்படி, வரப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X