பொது செய்தி

தமிழ்நாடு

திருமண மண்டப முன்பதிவு தொகை ரூ.2 லட்சம் தராமல் அலைக்கழிப்பதாக புகார்

Added : மே 23, 2020
Share
Advertisement

சேலம்: திருமண மண்டப முன்பணம், இரண்டு லட்சம் ரூபாயை திரும்ப தராமல் அலைக்கழிப்பதாக புகார் எழுந்துள்ளது.
சேலம், அஸ்தம்பட்டி, எம்.டி.எஸ்., நகர், காவேரி அவென்யூவைச் சேர்ந்த, ஓய்வு பெற்ற, உதவி செயற்பொறியாளர் அசோகன், 59, நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு: வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் நகராட்சியில் பணி புரிந்து ஓய்வு பெற்றேன். என் மகள் திருமணம், கடந்த ஏப்., 27ல் நடத்த ஏற்பாடு நடந்தது. அதற்காக, ஜாகீர்ரெட்டிப்பட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில், 2019, நவ., 13ல் பதிவு செய்து, அதே நாளில், முன்பணம், இரண்டு லட்சம் ரூபாய் வழங்கினேன். ஊரடங்கால், திட்டமிட்டபடி மண்டபத்தில், திருமணம் நடத்த முடியவில்லை. மாறாக, மணமகன் இல்லத்தில், எளிமையாக நடந்தது. பின், மண்டபம் சென்று, பணம் கேட்டபோது, அடுத்தது யாரும் பதிவு செய்தால் தான் தருவோம் எனக்கூறினர். பலமுறை கேட்டும் அலைக்கழிக்கின்றனர். இதுகுறித்து, போலீஸ் துணை கமிஷனரிடமும் புகாரளிக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறியுள்ளார். சூரமங்கலம் இன்ஸ்பெக்டர் செந்தில் கூறுகையில், ''பலமுறை அறிவுறுத்தியும், மண்டப நிர்வாகத்தினர் பணம் தர மறுக்கின்றனர்,'' என்றார். மண்டப மேலாளர் முத்துக்குமார் கூறுகையில், ''அடுத்த முன்பதிவு வந்ததும், பணம் கொடுப்பதாக தெரிவித்துவிட்டோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X