பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களை சுத்தப்படுத்த உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களை சுத்தப்படுத்த உத்தரவு

Added : மே 23, 2020
Share
சேலம்: பிளஸ் 2 விடைத்தாள் மையங்களை சுத்தப்படுத்தி, முன்னேற்பாடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில், கடந்த மார்ச்சில் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு முகாம், விரைவில் தொடங்கவுள்ளது. ஏற்கனவே மூன்று மையங்களில் மதிப்பீட்டு பணி மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், 'கொரோனா'வுக்கு, சமூக இடைவெளி தேவை என்பதால், ஆறு மையங்களாக

சேலம்: பிளஸ் 2 விடைத்தாள் மையங்களை சுத்தப்படுத்தி, முன்னேற்பாடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், கடந்த மார்ச்சில் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு முகாம், விரைவில் தொடங்கவுள்ளது. ஏற்கனவே மூன்று மையங்களில் மதிப்பீட்டு பணி மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், 'கொரோனா'வுக்கு, சமூக இடைவெளி தேவை என்பதால், ஆறு மையங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளன.மையம் அமைக்கப்பட்டுள்ள பள்ளிகள், இரு மாதமாக செயல்படாமல் இருப்பதால், அவற்றை சுத்தப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால், பிளீச்சிங் பவுடர், பினாயில், லைசால் ஆகியவற்றால், வகுப்பறை, சுற்றுப்புறங்களை சுத்தப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. அத்துடன், மையத்துக்கு வரும் ஆசிரியர் கைகழுவ, சோப்பு, சானிடைசர், தண்ணீர் வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்படவுள்ளன. ஆசிரியர்களுக்கு, அவரவர் வசதிக்கேற்ப மையம் தேர்வு செய்து, பணியாணை வழங்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X