பொது செய்தி

தமிழ்நாடு

சந்துக்கடையை ஒடுக்க போலீஸ் முயற்சி: டாஸ்மாக் மேற்பார்வையாளருக்கு எச்சரிக்கை

Added : மே 23, 2020
Share
Advertisement

ஓமலூர்: 'டாஸ்மாக்கில் மொத்த விற்பனை செய்யக்கூடாது' என, மேற்பார்வையாளர்களுக்கு, போலீசார் எச்சரித்தனர்.
சந்து கடை வியாபாரிகளுக்கு, சரக்கு விற்பனை செய்வதில்லை என, டாஸ்மாக் சூப்ரைஸரிடம், போலீசார் எழுதி வாங்கியுள்ளனர். சேலம் மாவட்டம், ஓமலூரில், பஸ் ஸ்டாண்டில் இரண்டு, காமலாபுரத்தில் ஒன்று, தாத்தியம்பட்டி செல்லும் வழியில் இரண்டு என, ஐந்து டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. இந்நிலையில், ஓமலூர், பொட்டியபுரம், கருத்தானூர், அடைக்கனூர், ரெட்டியூர் உள்ளிட்ட கிராமங்களில் சந்துக்கடைகள் தொடர்ந்து இயங்கி வருகின்றன. போலீசார் வழக்குப்பதிந்தாலும் பலனில்லை. அடைக்கனூரில், 'இப்பகுதியில் மது விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளியாட்கள் கிராமத்துக்குள் வரக்கூடாது'என, எச்சரிக்கை பலகை வைத்தனர். ஆனாலும் பலனில்லை. இதனால், ஓமலூர் போலீசார், டாஸ்மாக் மேற்பார்வையாளர்களை, நேற்று, ஸ்டேஷனுக்கு வரவழைத்தனர். தொடர்ந்து, 'மொத்தமாக யாருக்கும் மதுபானம் விற்கக்கூடாது' என எழுதி வாங்கிக்கொண்டு, அவர்களை அனுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X