பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு படிப்படியாக தளர்வு: வெல்லம் உற்பத்தி அதிகரிப்பால் விலை சரிவு

Added : மே 23, 2020
Share
Advertisement

சேலம்: ஊரடங்கில், படிப்படியாக தளர்வு அளித்து வரும் நிலையில், வெல்ல உற்பத்தியில் ஏற்பட்ட சுறுசுறுப்பால், மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்து, அதன் விலை, கிலோவுக்கு ஆறு ரூபாய் சரிந்தது.
ஊரடங்கால், சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு, கரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில், கடந்த, மார்ச், ஏப்ரலில், கரும்பு அறுவடை பாதிக்கப்பட்டு, வெல்ல உற்பத்தி நிறுத்தப்பட்டது. மே முதல் வாரம், விவசாய பணிக்கு விதிவிலக்களித்ததால், கரும்பு அறுவடை தொடங்கியது. அதேபோல், சிறு குறு தொழிற்சாலைகள் இயங்க அனுமதித்ததால், பெரிய, நடுத்தர வெல்ல உற்பத்தி ஆலைகளும் செயல்பட தொடங்கின. இதனால், அதன் உற்பத்தியில் சுறுசுறுப்பு ஏற்பட்டு, மார்க்கெட்டுக்கு வெல்லம் வரத்து அதிகரித்துள்ளது. அதேநேரம், உத்தரபிரதேசம், பீகாரிலிருந்தும் வெல்லம் விற்பனைக்கு வரத்தொடங்கியதால், அதன் விலை, நேற்று கிலோவுக்கு, ஆறு ரூபாய் சரிந்தது. அதன்படி, உருண்டை வெல்லம் முதல் ரகம் கிலோ, 60க்கு விற்றது, 54 ரூபாய், இரண்டாம் ரகம், 58க்கு விற்றது, 52 ரூபாய், மூன்றாம் ரகம், 56க்கு விற்றது, 50 ரூபாயாக சரிந்துள்ளது. நாட்டு சர்க்கரை முதல் ரகம், 60க்கு விற்றது, 56 ரூபாய், இரண்டாம் ரகம், 57க்கு விற்றது, 53 ரூபாய், மூன்றாம் ரகம், 54க்கு விற்றது, 50 ரூபாயாக குறைந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X