ரூ.5 லட்சம் வங்கி கடனுதவி: மெக்கானிக்குகள் எதிர்பார்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.5 லட்சம் வங்கி கடனுதவி: மெக்கானிக்குகள் எதிர்பார்ப்பு

Added : மே 23, 2020
Share

சேலம்: சேலம் மாவட்ட டூ வீலர் மெக்கானிக் தொழிலாளர் சங்க பொதுச்செயலர் தேவராஜன், தலைவர் மகேந்திரன், நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு: சங்கத்தில், 875 உறுப்பினர் உள்ளனர். ஊரடங்கால், 58 நாளாக கடை திறக்காமல், வருவாயின்றி, கடை, வீட்டு வாடகை, மின் கட்டணம் உள்ளிட்ட செலவினங்களை எதிர்கொள்ள முடியாமல் சிரமத்துக்கு ஆளாகி இருக்கிறோம். பாதிப்பிலிருந்து மீண்டு வர, தொழிலை அபிவிருத்தி செய்ய, மெக்கானிக் ஒவ்வொருவருக்கும், தலா ஐந்து லட்சம் ரூபாய் வங்கி கடன் வழங்க வேண்டும். மத்திய அரசு அறிவித்த, பிணை இல்லாத கடன் திட்டத்தில், மானியம், சலுகையுடன், கடனுதவி வழங்கி, மெக்கானிக் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X