பொது செய்தி

தமிழ்நாடு

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: நிர்வாகி 12 பேர் மீது வழக்கு

Added : மே 23, 2020
Share
Advertisement

ஆத்தூர்: அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, இ.கம்யூ., விவசாய சங்கம், தொ.மு.ச., நிர்வாகிகள், 12 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிந்தனர். ஆத்தூர், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, இ.கம்யூ., கட்சி விவசாய சங்கம் சார்பில், நேற்று, மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், பலர், கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, விவசாய சங்க மாவட்ட துணை செயலர் சீனிவாசன் உள்பட எட்டு பேர் மீது, ஆத்தூர் டவுன் போலீசார், இரு பிரிவில் வழக்குப்பதிந்தனர். அதேபோல், ஆத்தூர் அரசு போக்குவரத்து கிளை பணிமனை முன், தொ.மு.ச., சார்பில், நடத்துனர் சங்க செயலர் சாமிநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர் மீது, ஆத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X