சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பந்தய குதிரை ஓட்டத்திறனை அதிகரிக்க கள்ளச்சாராயம் காய்ச்சியவருக்கு காப்பு

Added : மே 23, 2020
Share
Advertisement

சேலம்: பந்தய குதிரை ஓட்டத்திறனை அதிகரிக்க, வீட்டிலேயே கள்ளச்சாராயம் காய்ச்சியவரை, போலீசார் கைது செய்தனர். சேலம், கிச்சிப்பாளையம் அருகே, சன்னியாசிகுண்டு பாறைக்காட்டைச் சேர்ந்தவர் சந்துரு, 40; பந்தய குதிரைகளை வளர்த்து, பெங்களூரு, சென்னை, மேற்கு வங்கத்தில் விற்று வருகிறார். அவர், கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கிச்சிப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் ஆய்வு செய்ததில், 100 லிட்டர் கள்ளச்சாராய ஊறல், 5 லிட்டர் சாராயம் இருப்பது கண்டறியப்பட்டது. அவரை கைது செய்த போலீசார், சாராயம், ஊறலை அழித்தனர். விசாரணையில், 10க்கும் மேற்பட்ட குதிரைகளை வளர்த்து வருவதால், அதன் ஓட்டத்திறனை அதிகரிக்க, உணவுடன் சாராயத்தை கலந்து கொடுத்ததாக தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X