பொது செய்தி

தமிழ்நாடு

மூத்தோர் தடகளத்தில் சாதித்த பெண் ஏட்டு புற்றுநோயால் இறப்பு

Added : மே 23, 2020
Share
Advertisement

சேலம்: மூத்தோர் தடகளத்தில் சாதித்த பெண் ஏட்டு, மார்பக புற்றுநோயால் இறந்தார். சேலம், அஸ்தம்பட்டியைச் சேர்ந்தவர் வனிதா, 48. கடந்த, 1997 போலீஸ் தேர்வில் வெற்றி பெற்று பணியில் இணைந்தார். சங்கிலி குண்டு எறிதல், கம்பு ஊன்றி தாண்டுதல், ஓட்டம், துப்பாக்கி சுடுதல் உள்ளிட்ட தடகள போட்டிகளில் முத்திரை பதித்த இவர், இதுவரை, 80 தங்கம், 120 வெள்ளி, 140 வெண்கலம் என, 340 பதக்கங்களை குவித்துள்ளார். மாநில, தேசியம், சர்வதேச போட்டிகளிலும் சாதித்த இவருக்கு, 2018 நவம்பரில், மார்பக புற்றுநோய் இருப்பது தெரிந்தது. அதற்காக, சேலம், கோவையிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். இறுதியாக, 2019 நவ., 15 முதல், 17 வரை, திருச்சியில் நடந்த மூத்தோர் தடகளத்தில், புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்தபடி சங்கிலி குண்டு எறிதலில் மூன்றாமிடம், மும்முறை தாண்டுதலில் இரண்டாமிடம் பிடித்தார். கடந்த மூன்று மாதமாக, அவரது உடல்நிலை மோசமடைந்த நிலையில், நேற்று மதியம், 2:30 மணிக்கு இறந்தார். அவருக்கு, போலீசார், அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X