பொது செய்தி

தமிழ்நாடு

கோவில் பராமரிப்பு பணி: அறநிலைய அதிகாரிகள் ஆய்வு

Added : மே 23, 2020
Share
Advertisement

ஆத்தூர்: நான்கு கோவில்களின் பராமரிப்பு பணி குறித்து, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ்வரர், ஏத்தாப்பூர் சாம்பவமூர்த்தீஸ்வரர், கோபால சுவாமி பெருமாள், பேளூர் தான்தோன்றீஸ்வரர் ஆகிய கோவில்களின் பராமரிப்பு பணி, கும்பாபி?ஷகம் நடத்த, தமிழக அரசு, தலா ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. நேற்று, சேலம் மாவட்ட ஹிந்து சமய அறநிலையத்துறை, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன் தலைமையில், ஆத்தூர் எம்.எல்.ஏ., சின்னதம்பி உள்ளிட்ட அலுவலர்கள், நான்கு கோவிலிலும் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தரைத்தளம் முழுதும் கருங்கல் பதிப்பது, பராமரிப்பு பணி, கும்பாபி?ஷகம் நடத்துவது தொடர்பாக ஆலோசித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X