பொது செய்தி

தமிழ்நாடு

நுண்ணீர் பாசன திட்டத்தில் கூடுதல் மானியம் பெறலாம்

Added : மே 23, 2020
Share
Advertisement

பனமரத்துப்பட்டி: மானியத்தில், நுண்ணீர் பாசனம் அமைக்கும் விவசாயிகள், மோட்டார், தொட்டி, ஆழ்துளை கிணறு அமைக்க, கூடுதல் மானியம் பெறலாம். இதுதொடர்பாக, பனமரத்துப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் வேலு கூறியதாவது: சிறு, குறு விவசாயிகள், சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம், மழை தூவான் அமைக்க, 100 சதவீத மானியம், மற்ற விவசாயிக்கு, 75 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. அதற்கு, கணினி பட்டா, நில வரைபடம், அடங்கல், ஆதார், ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், சிறு, குறு விவசாய சான்று, இரு புகைப்படம் ஆகியவற்றை, வேளாண் துணை, உதவி அலுவலர்களிடம் கொடுத்து, விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும். கூடுதல் மானியம் பெற, துணை நீர் பாசன மேலாண் செயல்பாடுகள் திட்டத்தில், டீசல் மோட்டார் அல்லது மின் மோட்டார் அமைக்க, 15 ஆயிரம் ரூபாய், குழாய் அமைக்க ஹெக்டேருக்கு, 10 ஆயிரம் ரூபாய், தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிக்கு, 40 ஆயிரம் ரூபாய், ஆழ்துளை கிணறுக்கு, 25 ஆயிரம் ரூபாய் பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X