சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆயுள் தண்டனை கைதி மயங்கி விழுந்து சாவு

Added : மே 23, 2020
Share
Advertisement

சேலம்: ஆயுள் தண்டனை கைதி மயங்கி விழுந்து இறந்தார். சேலம், சங்கர் நகரைச் சேர்ந்த, ஸ்ரீரங்கன் மகன் செல்வம், 39; கடந்த, 2012ல், சென்னகிருஷ்ணாபுரத்தில், ரவிபொம்மண்ணா என்பவரை கொன்ற வழக்கில் அழகாபுரம் போலீசார் கைது செய்தனர். இதனால், 2014 ஏப்., 17ல், செல்வத்துக்கு ஆயுள் தண்டனை விதித்து, சேலம் நீதிமன்றம் உத்தரவிட்டதால், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 2017ல், சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். நேற்று, நடைபயிற்சி மேற்கொண்ட அவர், சமையற்கூடம் அருகே வந்தபோது, மயங்கி விழுந்தார். சக கைதிகள், அவரை மீட்டு, சிறை வளாக மருத்துவமனையில், முதலுதவிக்கு பின், சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில், வழியிலேயே அவர் இறந்தார். அஸ்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X