பொது செய்தி

இந்தியா

ஒரே நாளில் 6,654 பேருக்கு கொரோனா: 134 பேர் பலி

Updated : மே 23, 2020 | Added : மே 23, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
india, coronavirus update, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்,

புதுடில்லி: இந்தியா முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,25,101 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் இதுவரை இல்லாத எண்ணிக்கையாக 6,654 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் ஏறத்தாழ 25 ஆயிரம் பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 137 பேர் உயிரிழந்துள்ளனர். இதனுடன் சேர்ந்து பலி எண்ணிக்கை 3,720 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த இரு மாதங்களில் மட்டும் கொரோனா பரிசோதனை எண்ணிக்கையானது 100 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த மார்ச்சில் ஒர நாளைக்கு ஆயிரம் பரிசோதனை நடந்த நிலையில், இந்த மாதம் ஒர நாளுக்கு ஒரு லட்சம் பரிசோதனை நடக்கிறது.


latest tamil news10 லட்சம் பேருக்கு இந்தியாவில் 2 ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடத்தப்படுகிறது. அதேநேரத்தில் ஸ்பெயினில் 65 ஆயிரம் பேருக்கும், அமெரிக்கா , ஜெர்மனியில் 38 ஆயிரம் பேருக்கும், பிரான்சில் 21 ஆயிரம் பேருக்கும் பரிசோதனை நடக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மஹாராஷ்டிராவில் 2,940, தமிழகத்தில் 784, டில்லியில் 660 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில் கொரோனா தொற்று முறையே, 44 ஆயிரம், 14 ஆயிரம், 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
24-மே-202002:30:24 IST Report Abuse
 ஜெய்ஹிந்த்புரம் மே 23, 131,423 இந்தியா - ஈரானை தாண்ட இன்னும் 2,000 தான். தொற்றில் ஈரானை தாண்டி விடுவோம். ஆன் டார்கெட், இரண்டு வாரத்துக்கு முன் சொன்னது தான். ஞாயிறன்று ஈரானை தாண்டும், அடுத்த இரண்டு வாரத்தில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் நின்று "ஹொவ்டி டிரம்ப்பு .."
Rate this:
Cancel
Krishna - bangalore,இந்தியா
23-மே-202012:25:46 IST Report Abuse
Krishna Disease-Under Control due to Lockdown & Hot Climate (Deaths are Far Less Compared to Normalcy Except Inflated Corona Deaths by Vested Health Terrorism 50% Deaths are Only Due to Fear and Negligent Medical Care & Hi-Patient Concentration)
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X