சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எஸ்.ஐ.,யிடம் 'லடாய்' மா.செ., சுற்றிவளைப்பு

Added : மே 23, 2020
Share
Advertisement

சேலம்: எஸ்.ஐ.,யுடன் வாக்குவாதம் செய்த, அகில இந்திய மஜ்லிஸ் கட்சி, மாவட்ட செயலரை, போலீசார் கைது செய்தனர். ஊரடங்கு அமலிலுள்ள நிலையில், கடந்த மார்ச், 30ல், சேலம் டவுன் முத்தவல்லி முகமது யாகூப் தெருவில், போலீசார் ரோந்து மேற்கொண்டனர். அப்போது, சாலையில் ஆறு பேர் கேரம் போர்டு விளையாடிக்கொண்டிருந்தனர். அவர்களை, டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். இதனால், பொய் வழக்கு போடுவதாக கூறி, நாராயண நகரைச் சேர்ந்த, அகில இந்திய மஜ்லிஸ் கட்சி, சேலம் மாவட்ட செயலர் சேவகன் இப்ராஹிம், 35, தலைமையில், 24 பேர், எஸ்.ஐ., பழனிசாமியுடன் வாக்குவாதம் செய்தனர். இதுகுறித்து, எஸ்.ஐ., புகார்படி, மார்ச், 31ல், சேவகன் இப்ராஹிம் உள்பட, 24 பேர் மீது, அரசு ஊழியரை பணிபுரிய விடாமல் தடுத்தது, தகாத வார்த்தையால் திட்டியதாக, போலீசார் வழக்குப்பதிந்தனர். இதனால், சேவகன் இப்ராஹிம் தலைமறைவானார். நேற்று முன்தினம் இரவு, அவர், நாராயண நகரில் இருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார், அவரை சுற்றிவளைத்து கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X