சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொழிலாளி கொலை: 4 கூட்டாளிக்கு காப்பு

Added : மே 23, 2020
Share
Advertisement

மேட்டூர்: கட்டட தொழிலாளி கொலையில், கூட்டாளிகள் நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர். மேட்டூர், அம்மன் நகரைச் சேர்ந்த, கட்டட தொழிலாளி மகாராஜா, 36. கடந்த, 19 இரவு, அவர், உடன் பணிபுரியும் கூட்டாளிகள் சிலருடன், டான்சி குடியிருப்பு, துர்கையம்மன் கோவில் அருகே மது அருந்தினர். அப்போது, அவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில், மகாராஜா தலையில் கல்லை போட்டு கொலை செய்தனர். மேட்டூர் போலீசார் விசாரித்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மூன்று பேர், நேற்று முன்தினம், குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராகினர். அவர்களை, மேட்டூர் போலீசார் அழைத்து வந்து விசாரித்தனர். அதில், மேட்டூர், மட்டசாலையைச் சேர்ந்த யுவராஜ், 22, வல்லரசு, 22, விஜய், 20, என்பதும், அவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில், போதையில் கொன்றதும் தெரிந்தது. அவர்களின் தகவல்படி, அதே பகுதியைச் சேர்ந்த மூர்த்தி, 29, என்பவரையும், போலீசார் கைது செய்து, நேற்று, மேட்டூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையிலடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X