சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊர்க்காவல் படை வீரர் இறப்பில் மர்மம்; சடலத்துடன் மறியல்

Added : மே 23, 2020
Share
Advertisement

வேலூர்: பள்ளிகொண்டா டோல்கேட்டில், ஊர்க்காவல் படை வீரர் இறப்பில் மர்மம் உள்ளதாக கூறி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அருகே, அய்யாவூரை சேர்ந்தவர் பிரதாப், 40. இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக, பள்ளிகொண்டாவில் ஊர்க்காவல் படையில் வீரராக பணிபுரிந்தார். கடந்த, 20ல் நள்ளிரவு, 1:00 மணிக்கு அகரம்சேரி மெயின் சாலையில், பிரதாப் இறந்து கிடந்தார். அடையாளம் தெரியாத வாகனம் மோதி, பிரதாப் இறந்ததாக பள்ளிகொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிரதாப் உடல், நேற்று முன்தினம் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, சடலத்தை புதைப்பதற்காக வேனில் எடுத்து சென்றனர். அப்போது, பிரதாப் சாவில் மர்மம் உள்ளதாக கூறி, பள்ளிகொண்டா டோல்கேட்டில் இரவு, 10:00 மணிக்கு வந்த போது, சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில், பிரதாப் இறந்ததை மர்ம மரணம் என மாற்றி வழக்கு பதிவு செய்து விசாரித்து, குற்றவாளிகளை கைது செய்வதாக கூறியதையடுத்து, கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X